• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பன்னீர் அவரைக்காய் குர்மா

February 1, 2017 awesomecuisine.com

தேவையான பொருள்கள் :

பன்னீர் – அரை கப்
அவரைக்காய் – அரை கப்
பாதாம் – ஆறு (ஒரு மணி நேரம் ஊறவைத்து, விழுதாக அரைத்து வைத்துகொள்ளவும்)
எண்ணெய் – தேவையான அளவு
வெங்காயம் – நான்கு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – நான்கு
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – ஆறு
கொத்தமல்லி – ஒரு கை
பிரிஞ்சி இலை – ஒன்று
பட்டை – இரண்டு
லவங்கம் – இரண்டு
ஏலக்காய் – இரண்டு
தயிர் – கால் கப் (புளிக்காத தயிர்)
தனியா தூள் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். வறுத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

அதே கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பின், அரைத்த விழுது மற்றும் பாதாம் விழுது சேர்த்து வதக்கவும்.

பிறகு, நறுக்கிய அவரைக்காய், பன்னீர், தயிர், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறி, மூடி பத்து நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான பன்னீர் அவரைக்காய் குர்மா தயார்.

மேலும் படிக்க