• Download mobile app
02 Feb 2026, MondayEdition - 3645
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தயிர் உருளை

April 18, 2017 koodal.com

தேவையான பொருட்கள்:

சிறிய உருளை கிழங்கு – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 2
சற்று புளித்த தயிர் – 1/2 கப்
இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துகொள்ளுங்கள்.வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும்.எண்ணெய் காய வைத்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் உருளைக்கிழங்கு சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் வைத்து வதக்கவும்.பின்னர் கரம் மசாலா, தயிர் சேர்த்து சுருள கிளறி இறங்குங்கள்.பிரட், பூரி, சப்பாத்திக்கு சூப்பர் சைடு டிஷ் இது.

மேலும் படிக்க