• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுவையான சைனீஸ் ஸ்பெஷல் ஃப்ரைடு ரைஸ் ரெசிபி!

July 30, 2018 tamilsamayam.com

சுவையான சைனீஸ் ஃப்ரைடு ரைஸ் ரெசிபி எப்படி எளிதாக நம் வீட்டிலேயே சமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

தேவையானவை

பாசுமதி அரிசி – ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கோஸ் – ஒரு கப், குடமிளகாய், வெங்காயம் – தலா ஒன்று, பூண்டு – 3 பற்கள், வெங்காயத்தாள் – ஒரு கட்டு (நறுக்கவும்), சோயா சாஸ் – 2 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

1.கோஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். சிறிதளவு வெங்காயத்தாளை தனியே எடுத்து வைக்கவும்.

2.பாசுமதி அரிசியுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து, தேவையான நீர்விட்டு மலர வேகவைத்துக் கொள்ளவும்.

3.அகலமான கடாயில் மீதமுள்ள ஆலிவ் எண்ணெயை ஊற்றி… நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

4.இதனுடன் நறுக்கிய வெங்காயத்தாள், கோஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.

5.பிறகு, சோயா சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும்.

6.தீயைக் குறைத்து, பாசுமதி அரிசி சாதத்தை சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும்.

7.தனியே எடுத்து வைத்த வெங்காயத்தாளைத் தூவி பரிமாறவும்.

8.சுவையான சைனீஸ் ஸ்பெஷ்ல் ஃப்ரைடு ரைஸ் ரெடி.

மேலும் படிக்க