• Download mobile app
25 Feb 2026, WednesdayEdition - 3668
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சந்திரகலா

January 9, 2017 தண்டோரா குழு

தேவையான பொருட்கள்

மைதா – ஒரு கப்.

நெய் – அரை கப்.

சர்க்கரை – ஒரு கப்.

கோவா – 35 கிராம் (சர்க்கரை இல்லாதது).

ஆரஞ்சு கலர் – கால் டீஸ்பூன்.

சோடா – கால் டீஸ்பூன்.

முந்திரி பவுடர் – மூன்று டேபிள்ஸ்பூன்.

ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்.

எண்ணெய் – தேவைகேற்ப.

செய்முறை

சர்க்கரை இல்லாத கோவாவில் ஏலக்காய் தூள், முந்திரி தூள் சேர்த்து பிசையவும்.சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்கவிட்டு ஒரு கம்பி பதம் பாகு வந்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும்.

பிறகு, ஒரு பத்திரத்தில் மைதா மாவு சிறிதளவு தண்ணீர், கலர் பவுடர், சோடா ஆகியவற்றை கலந்து நெய் சூடாக்கி அதில் கலந்து நன்றாக பிசையவும்.பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பூரி போல் திரட்டி நடுவில் கோவா கலவையை வைத்து சோமாசு போல் செய்து கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.

பிறகு, சர்க்கரை பாகில் போட்டு ஊறவைத்த பின் எடுத்து பரிமாறவும்.

மேலும் படிக்க