• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேப்ஸிகம் வெஜ் ஆம்லெட் செய்ய!

June 26, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

குடைமிளகாய் – 1 (பெரியது)
கடலை மாவு – 1/2 கப்
மிளகாய் தூள் – 3/4 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் – 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
கேரட் – 1
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

குடைமிளகாய்,விதையை நீக்கி விட்டு வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.மீதமாகும் மேல் பகுதி மற்றும் கீழ்ப் பகுதியை பொடியாக வெட்டவும்.வெங்காயம்,கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும்.

மாவில் எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி உப்பு சேர்த்து கரைக்கவும். (பஜ்ஜி மாவு பதமாக) கரைத்து கொள்ளவும்.தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு குடைமிளகாயை வைத்து நடுவில் கரைத்த மாவை ஊற்றி,சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக விடவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு குடைமிளகாயை வைத்து நடுவில் கரைத்த மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக விடவும்.சுவையான கேப்ஸிகம் வெஜ் ஆம்லெட் தயார்.

மேலும் படிக்க