• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உருளைக்கிழங்கு பீட்சா தோசை!

December 15, 2018 tamil.samayam.com

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உருளைக்கிழங்கு பீட்சா தோசையை எப்படி எளிதாக நம் வீட்டிலேயே சமைப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மைதா – 1 கப், கோதுமை மாவு – 1 கப், அரிசி மாவு – 1 கப், உப்பு, எண்ணெய் – தேவைக்கு, ரவை – 1/4 கப், தக்காளி – 2 கப், வெங்காயம் – 2, குடைமிளகாய் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், துருவிய சீஸ் – 1 கப், உதிர்த்து வேகவைத்த ஸ்வீட் கார்ன் – 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – சிறிது, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, மிளகு தூள் – 1 டீஸ்பூன், உருளைக்கிழங்கு – 250 கிராம், பச்சைமிளகாய் சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, ரவை உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமான தோசையாக ஊற்றி, அதன் மீது கலந்த கலவையை பரப்பி, அதன் மேல் கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

மேலும் படிக்க