• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காரைக்குடி கோழி குழம்பு

November 21, 2018 tamilboldsky.com

தேவையான பொருட்கள்:

கோழி – 1/2 கிலோ (நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும்)
தக்காளி – 2 (நறுக்கியது)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது (அலங்கரிக்க)

அரைப்பதற்கு…

தேங்காய் – 1/2 மூடி
கசகசா – 1/2 டீஸ்பூன்
முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி விடவும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் சிறிது உப்பு தூவி பிரட்டி, மூடி வைத்து தக்காளியை வேக வைக்க வேண்டும். தக்காளியானது நன்கு வெந்ததும், அதில் சிக்கனை சேர்த்து, அத்துடன் சிறிது உப்பு தூவி பிரட்டி, மூடி வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும்.

சிக்கனானது ஓரளவு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். சிக்கனானது நன்கு வெந்து, பச்சை வாசனை போன பின் வாணலியை இறக்கிவிட்டு, பின் தாளிப்பற்கு சிறு வாணலியை அடுப்பில் வைக்க வேண்டும்.

பிறகு அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவினால், காரைக்குடி கோழி குழம்பு ரெடி!!!

மேலும் படிக்க