• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விசுவாசம் படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்சங்கர் ராஜா !

November 23, 2017 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்துக்கு விசுவாசம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரிக்க இருப்பதாகவும் தீபாவளியன்று படம் வெளியாகும் என்றும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய இரு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்திருந்தார்.ஆனால் அஜித்தின் அடுத்த படமான ‘விசுவாசம்’ படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அதில், யுவன் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் யுவன்ஷங்கர்ராஜா கூட்டணியில் `பில்லா’, `ஏகன்’, `மங்காத்தா’, `பில்லா 2′, ஆரம்பம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே ஆல்பம் ஹிட்டானது. இந்நிலையில்,அஜித் – யுவன் மீண்டும் இணைந்தால் அது அஜித் ரசிகர்களுக்கு இசை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு 2018 ஜனவரியில் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க