• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிப்ரவரி 2-ல் ‘தல 57’ முதல் பார்வை?

January 30, 2017 tamilsamayam.com

அஜித்குமார் நடிப்பில் மிகவும் எதிர்பபார்க்கப்படும் ‘ஏகே 57’ திரைப்படத்தின் முதல் பார்வை பிப்.2-ல் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோலிவுட்டில் டாப் டிரெண்டிங்கில் பேசப்படும் ‘தல 57’ படத்தின் முதல் பார்வையை ஜனவரி மாத இறுதி வாரத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், ஜளிக்கட்டு விவகாரம் காரணமாக முதல் பார்வை வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இயக்குனர் சிறுத்தை சிவாவின் வியாழக்கிழமை சென்டிமென்ட்படி, இப்படத்தின் முதல் பார்வையை வருகிற பிப்.2ஆம் தேதி வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அன்றைய தினம் முதல் பார்வை வெளியாகாவிட்டாலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பாவில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஏகே 57’ திரைப்படத்திற்கு ‘விவேகம்’ என்று தலைப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்குமார், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் இணைந்து நடிக்கும் இப்படத்தை சத்யா ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் படிக்க