• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன்னை கௌதம் மேனன் கைவிட்டதால் சூர்யா அதிர்ச்சி!

January 12, 2017 tamilsamayam.com

கௌதம் மேனன் தன்னை விடுத்து விக்ரமுடன் இணைவதால் நடிகர் சூர்யா அதிர்ச்சியில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ‘காக்க காக்க’. இந்தப் படம் மூலம் சூர்யாவை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்த பெருமை இயக்குனர் கௌதம் மேனனுக்கு உண்டு. அந்தப் படத்திற்குப் பிறகுதான் சூர்யாவுக்கென ரசிகர்கள் சேர்ந்தார்கள். சூர்யாவை அந்தப் படத்தில் நாயகனாக்க பெரும் முயற்சி எடுத்தவர் ஜோதிகா. முதலில் தயங்கிய கௌதம் மேனன் பின்னர் அதற்கு சம்மதித்தார். படமும் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து ‘வாரணம் ஆயிரம்‘ படத்திலும் கௌதம் மேனன், சூர்யா கூட்டணி இன்னொரு வெற்றியைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் தன்னைப் பெரிய ஹீரோவாக நினைக்க ஆரம்பித்த சூர்யா, தன்னை மாற்றிய கௌதம் மேனனிடமே கதையை திருத்தச் சொல்லியிருக்கிறார். அதனால் கௌதம் மேனன், சூர்யாவை வைத்து எடுக்க ‘துருவ நட்சத்திரம்‘ படம் பூஜையுடன் நின்று போனது. மேலும் படத்திலிருந்து விலகியதற்கான காரணம் கூறுகையில் அதில் கௌதம் மேனனை மறைமுகமாக தாக்கியுள்ளார். இதனால் இந்த கூட்டணி இணைய வாய்ப்பில்லை என்ற நிலை உருவானது. இருந்தாலும் சிலரது விடாமுயற்சியில் மீண்டும் ‘துருவ நட்சத்திரம்‘ படம் ஆரம்பமாகலாம் என்றார்கள். அவர்கள் சொன்னது போல் படம் ஆரம்பமாகிவிட்டது.

ஆனால், படத்திலிருந்து சூர்யாவை நீக்கிவிட்டு, நடிகர் விக்ரமை மாற்றினார் கௌதம் மேனன். வேறு யாரை வைத்து இந்தப் படத்தை எடுத்தாலும் சூர்யா கண்டிருக்கமாட்டார். சூர்யா போட்டியாக நினைக்கும் விக்ரமை வைத்து கௌதம் மேனன் ஆரம்பித்திருப்பது சூர்யாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க