• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் கேரியரில் இப்படம் தான் மிக முக்கியமான படமாக இருக்கும் – நிவின் பாலி

December 9, 2017 தண்டோரா குழு

தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர், நிவின் பாலி.இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான, ‘பிரேமம்’ திரைப்படம், தமிழிலும் ரசிகர்களை உருவாக்கியது.

மலையாளப் படங்களில் நடித்து வரும் இவர், முதல்முறையாக நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், ‘ரிச்சி’ என்ற படத்தில் நிவின் பாலி நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரொமோஷனுக்கு கோவை வந்த நிவின் பாலி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

நேரம் படத்திற்கு பின் நேரடியாக நான் நடித்த ரிச்சி வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறு வயதில் இருந்தே நிறைய படங்களை பார்த்துள்ளேன் அதனால் எனக்கு தமிழ் புரியும். ஆனால் பேச தான் முடியாது. இதனால் தமிழில் டப்பிங் கொடுக்க மிகவும் கஷ்டப்பட்டேன்.

தற்போது தமிழில் சில கதைகளை கேட்டுள்ளேன் விரைவில் அடுத்த தமிழ் படம் குறித்த அறிவிப்பு வரும். த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் படமும் விறுவிறுப்பாக போகின்றது இப்படம் ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.

மேலும், இந்தியிலும் ஒரு படம் நடித்து வருகிறேன். தற்போது நான் நடித்து வரும் “காயன் குளம் கொசுன்னி” கேரளாவின் முதல் ராபின்வுட் படம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவருகிறது. இப்படம் என் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்றார்.

மேலும் படிக்க