• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரே நாளில் ஒரு மில்லியன் வியூவர்ஸ் – உற்சாகத்தில் தனுஷ்

March 25, 2017 tamilsamayam.com

தனுஷின் பவர்பாண்டி பட டிரைலரை ஒரே நாளில் ஒரு மில்லியன் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக வலம் வரும் தனுஷ், பவர்பாண்டி படத்தை இயக்கி இயக்குனராக உருவெடுத்துள்ளார். தான் நடித்து வந்த சில படங்களிலேயே பேடு பேப்பரை கையில் எடுத்துக்கொண்டு உதவி இயக்குனராக சுற்றிக்கொண்டிருந்த தனுஷ், தங்க மகன் படத்தில் நடித்த போது, அந்த படத்தின் இயக்குநர் இல்லாத போது அவரே தனித்து நின்று படப்பிடிப்பை நடத்தினார்.

அதையடுத்து, தான் எழுதி வைத்திருந்த பவர்பாண்டி கதையை தனது தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய முதல் படத்தின் நாயகன் ராஜ்கிரனை நாயகனாக வைத்து தனுஷ் முழுநேர இயக்குனராகியுள்ளார். தற்போது அந்த படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

பவர்பாண்டி டிரைலர் வெளியிடப்பட்ட ஒரே நாளில் மில்லியன் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர். கிட்டத்தட்ட முன்னணி ஹீரோ படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு தனது பவர்பாண்டி படத்திற்கு கிடைத்துள்ளதால், இயக்குனர் தனுஷ் உற்சாகமடைந்துள்ளார்.

மேலும் படிக்க