• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வில்லு படத்தைத் தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாகும் லேடி சூப்பர் ஸ்டார்?

November 25, 2017 tamilsamayam.com

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தன்னுடைய 62வது படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

அட்லி இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வெற்றிப்படம் மெர்சல். வெளியாகி ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில் இன்னும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.120 கோடி வசூல் செய்துள்ளது. அதோடு இல்லாமல், உலகம் முழுவதிலும், ரூ.240 கோடி வசூல் படைத்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தன்னுடைய 62வது படத்தில் நடிக்கவுள்ளார். விவசாயிகளை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறாராம்.

அதில், ஒருவர் மாற்றுத்திறனாளியாகவும், இன்னொருவர் சாதாரண விவசாயி வர்க்கத்தைத் சேர்ந்த ஏழை விவசாயியாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நடிக்க இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. வரும் பொங்கலுக்கு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது. இப்படத்தில், விஜய்யுடன் இணைந்து நடிக்க பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக முறையான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க