• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள மக்களுக்காக நடிகர் விஜய் 70 லட்சம் ரூபாய் நிதியுதவி

August 21, 2018 தண்டோரா குழு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 361 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.கேரளாவில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.இதனால் வீடுகளை இழந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.

இதற்கிடையில்,கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில்,நடிகர் விஜய் கேரளாவின் வெள்ள நிவாரண நிதிக்கு 70 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

மேலும்,நடிகர் விஜய் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக முகாமில் தஞ்சமடைந்தவர்களுக்கும் பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான நிவாரண பொருட்கள் வாங்க தன்னுடைய அனைத்து மாவட்ட மக்கள் இயக்க ரசிகர்களுக்கும் 3 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.

இந்த நிவாரண பொருட்கள் தமிழ்நாட்டில் 15 மாவட்டத்தில் இருந்து 15 லாரிகள் மூலம் கேரளாவில் பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்திற்கு வழங்கப்படுகிறது.இன்று இரவு இந்த லாரிகள் அனைத்தும் கேரளாவில் உள்ள எர்ணாகுளம்,ஆலப்புழா,பத்தானம்திட்டா,பாலக்காடு மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லவுள்ளது.

மேலும் படிக்க