• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லாரன்ஸின் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் அக்ஷய் குமார்

January 29, 2018 தண்டோரா குழு

2015-ஆம் ஆண்டு ‘முனி’ பாகங்களின் தொடர்ச்சியாக வெளியான படம் ‘காஞ்சனா 2’ (முனி 3).ராகவா லாரன்ஸ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்து, இயக்கி, நடித்திருந்தார். இதில் லாரன்ஸுக்கு ஜோடியாக டாப்சி, நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஹாரர் காமெடி ஜானரைக் கொண்ட இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது, இந்த படம் ஹிந்தியில் ரீமேக்காகவுள்ளதாம்.

சமீப காலமாக சமூக அக்கறை கொண்ட படங்களில் நடித்து வரும் அக்க்ஷய், “ஹாரர் காமெடி படத்தில் நடிக்க விரும்புகிறேன்” என ஐ.எப்.எப்.ஐ-2017நிறைவு விழாவில் கூறியிருந்தார். அதன்படி, காஞ்சனா 2 படத்தின் ஹிந்தி வெர்ஷனில் ஹீரோவாக அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க