• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேவர் மகன் 2 கமல்ஹாசன் அறிவிப்பு

October 13, 2018 தண்டோரா குழு

1992–ல் பரதன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் தேவர் மகன். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன்,நாசர்,ரேவதி,கவுதமி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

தேசிய விருது பெற்ற இப்படம் இந்தி,கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.இதற்கிடையில் கமல் அரசியல் கட்சி துவங்கிய பின் அவர் நடித்து சமீபத்தில் வெளியான படம் `விஸ்வரூபம் 2’.தற்போது,கமல்ஹாசன் கைவசம் `இந்தியன் 2’ மற்றும் ‘சபாஷ் நாயுடு’ ஆகிய 2 படங்கள் உள்ளன.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல் தேவர் மகன் 2-ம் பாகம் உருவாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.அவர் அறிவித்த சில நிமிடங்களில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இச்செய்தி இடம்பெற்றது.ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்2 படத்திற்கு பின் இப்படத்தின் வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க