• Download mobile app
19 Apr 2026, SundayEdition - 3721
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூடர் கூடம் நவீனின் அடுத்த படத்தின் டைட்டிலை வெளியிட்ட கமல்ஹாசன் !

November 1, 2018 தண்டோரா குழு

இயக்குநர் நவீன் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம் மூடர் கூடம்.காமெடி கலந்த அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்றளவும் அப்படத்தின் வசனங்கள் பயன்படுத்தபட்டு வருகிறது.அதன்பிறகு எந்தப் படத்தையும் இயக்காத நவீன்,‘கொளஞ்சி’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இதற்கிடையில் தன்னுடைய இரண்டவது படமான அலாவுதீனும் அற்புத கேமராவும் படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இந்நிலையில்,நவீன் தான் இயக்கும் மூன்றாவது படத்தின் வேலைகளை துவங்கியுள்ளார்.அக்னி சிறகுகள் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரை இன்று உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்.அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கவுள்ளனர்.

மேலும்,ஷாலினி பாண்டே,நாசர்,ஜெகபதி பாபு,பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.அலாவுதீனும் அற்புத கேமராவும் படத்திற்கு பின் இப்படத்தின் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க