• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுரை நீதிமன்றத்தில் தனுஷ் ஆஜர்

February 28, 2017 tamilsamayam.com

மேலூர் தம்பதிகள் தொடர்ந்த வழக்கில் நடிகர் தனுஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.

நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என உரிமைக் கோரி மேலூரைச் சேர்ந்த கதிரேசன்(60), மீனாட்சி (55) தம்பதிகள் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ள நிலையில், நடிகர் தனுஷ் தரப்பில் இவ்வழக்கினை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கின் முந்தைய விசாரணையின்போது, தனுஷ் படித்த கல்விச் சான்றிதழ்களை தனுஷ் மற்றும் கதிரேசன் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டன. இதில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 10ஆம் வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை. கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு
வந்தது. விசாரணைக்குப்பின் இவ்வழக்கில் நடிகர் தனுஷின் அங்க அடையாளங்களை சரிப்பார்க்க அவரை இன்று(பிப்-28) நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரான தனுஷின் அங்க அடையாளங்களை சரிப்பார்க்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பதிவாளர் அறையில் தனுஷின் அங்க அடையாளங்களை மருத்துவர்கள் சரிப்பார்த்து இன்று அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

தம்பதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றிதழ்களுடன் தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என கூறி இவ்வழக்கை வருகிற மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க