• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல் ஹாலிவுட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்!

November 2, 2017 tamilsamayam.com

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஹாலிவுட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

’தி எக்ஸ்ட்ரார்டினரி ஜேர்னி ஆஃப் ஃபகிர்’ – தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் முதல் ஹாலிவுட் படமாகும். இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் நீல நிற சூட் அணிந்து, ஃபகிர் கதாபாத்திரத்தில் க்யூட்டாக காணப்படுகிறார்.

அவருடன் பிரெஞ்ச் நடிகர் பெரினிஸ் பெஜோ ஃபர்ஸ்ட் கையில் எதையோ காண்பித்துக் கொண்டு இருக்கிறார். அவர்களுக்கு பின்னால், பெரும் திரளான மக்கள் காணப்படுகின்றனர்.

இந்தப் படம் ரோமைன் புர்டோலஸின் நாவல் ’தி எக்ஸ்ட்ரார்டினரி ஜேர்னி ஆஃப் ஃபகிர்’ல் இருந்து உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த புத்தகம் 2014ல் எழுதப்பட்டு, 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இதன் கதை, ஒரு இந்திய சிறுவன் தனது தந்தையை கண்டறிய நிகழ்த்தும் சாகசப் பயணம் என்று கூறப்படுகிறது. இதனை கென் ஸ்காட் இயக்கி வருகிறார்.

இதில் பர்கத் அப்டி, எரின் மோரியார்டி , அபெல் ஜாஃப்ரி உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். முன்னதாக இப்படத்தில் உமா துர்மன் மற்றும் அலெக்சாண்ட்ரா தத்தாரியோ ஆகியோர் நடிக்க இருப்பதாக வதந்திகள் பரவியது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை வாங்க, ஏராளமான விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

மேலும் படிக்க