• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூப்பர்ஸ்டாரை இயக்க விரும்பிய மம்மூட்டி

April 17, 2017 tamilsamayam.com

‘பூதக்கண்ணாடி’ திரைப்படத்தில் சூப்பர்ஸ்டாரை முன்னணி கதாப்பாத்திரமாக வைத்து இயக்க விரும்பியதாக பிரபல மலையாள நடிகரான மம்மூட்டி தெரிவித்துள்ளார்.

‘பூதக்கண்ணாடி’ திரைப்படத்தின் கதையை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பகிர்ந்து கொண்டிருந்தாலும், அப்படத்தை இயக்க முடியவில்லை என மம்மூட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

லோஹித்தாஸ் இயக்கத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான ‘பூதக்கண்ணாடி’ திரைப்படத்தில் மம்மூட்டி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்துக்காக இயக்குனர் லோஹித்தாஸ், தேசிய விருது விழாவில் சிறந்த அறிமுக இயக்குனர் எனும் பிரிவில் ‘இந்திரா காந்தி விருது’ பெற்றார். மம்மூட்டி சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதினை வென்றார்.

பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி இணைந்து ‘தளபதி’ திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர். இப்படம் இதிகாச நூலான மகாபாரதத்தில் இடம்பெற்ற கர்ணன், துரியோதனன் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க