• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

6 பேக் போட்டோவைப் பார்த்து அஜித்திடமிருந்து வந்த வாழ்த்து – சூரி நெகிழ்ச்சி

October 13, 2018 தண்டோரா குழு

சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் நடிகர் சூரி கடும் உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக்கில் நடித்திருந்தார்.அவருடைய சிக்ஸ்பேக் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டார். சூரியின் சிக்ஸ்பேக் படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.அப்போது அவரை திரைத்துறையினரும், ரசிகர்களும் பாராட்டினர்.

இதற்கிடையில் இயக்குநர் ராஜ் சேதுபதி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ்,இந்துஜா,சாந்தினி ஆகியோர் நடித்துள்ள படம் பில்லா பாண்டி. தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் அஜித்தின் ரசிகராக நடித்திருக்கிறார்.இந்நிலையில்,இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் இயக்குநர் சீமான்,கருணாஸ்,சூரி,தயாரிப்பாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது இவ்விழாவில் பேசிய நடிகர் சூரி,

“அனைவருமே ஆர்.கே.சுரேஷை வில்லனாக வந்து நாயகனாகிவிட்டார் என்கிறார்கள்.ஆனால் ஆரம்பத்திலிருந்து நான் அவரை ஹீரோவாகத்தான் பார்த்தேன்.இந்த பில்லா பாண்டி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும்.எப்போவுமே தல-தளபதி இருவரின் வசனங்களை வைத்து பேசினாலே தியேட்டரில் கிளாப்ஸ் அதிரும்.அப்படி இருக்கும் போது அஜித் ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதைப் பார்த்து தெளிவாக செய்திருக்கிறார்கள்.அஜித் நல்ல மனிதர் என்பதை பலரும் சொல்லியிருக்கிறார்கள். நானும் அவருடன் வேதாளம் என்ற படத்தில் நடித்திருக்கிறேன்.சீமராஜா படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்த புகைப்படம் வெளியானவுடனே எதிர்பார்க்காத ஒரு ஃபோன் வந்தது.

அது வேறு யாரும் இல்லை இயக்குநர் சிவா தான். அஜித் சார் உங்களிடம் பேச விரும்புவதாக கூறி ஃபோனைக் கொடுத்தார்.நான் வணக்கம் கூறியவுடன், வாழ்த்துக்கள் சூரி 6 பேக் ஸ்டில் பார்த்தேன்.எவ்வளவு நாள் இதற்காக மெனக்கெட்டீங்க.சிறிய கிராமத்திலிருந்து வந்து சினிமாவுக்காக மெனக்கிட்டு இப்போது ஒரு சின்ன காட்சிக்காக இவ்வளவு மெனக்கிட்டு இருக்கிறீர்கள் வாழ்த்துகள் என்றார்.அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் மனிதர் எனக்கு போன் செய்து வாழ்த்து சொல்கிறாரே என நினைத்தேன் எனக்கு அவ்வளவு பெருமையாக இருந்தது”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க