• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் அஜித் விவேக் ஓபராய் அதிரடி

May 29, 2017 tamilsamayam.com

தென்னிந்திய சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் அஜித் மட்டுமே என்று, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடிகர் அஜித் உடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்க, சிவா இயக்கியுள்ள படம், விவேகம். இந்த படம், ஆகஸ்ட் மாதம் 10ம் தேதியன்று ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், விவேகம் படத்தில் நடித்தது பற்றிய அனுபவத்தை, ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு, அளித்த பேட்டியில் விவேக் ஓபராய் பகிர்ந்துகொண்டார்.

பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விவேக் ஓபராய், அந்த பேட்டியில், ” முதல்முறையாக, நேரடி தமிழ் படத்தில் நடித்துள்ளேன். படத்தின் பெயர் விவேகம். இதில், தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் அஜித் உடன் இணைந்து நடித்துள்ளது, மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படம் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

விவேகம் படத்தின் டீசர் பெரும் சாதனை படைத்துள்ள நிலையில், அஜித்தை விவேக் ஓபராய், சூப்பர் ஸ்டார் என வர்ணித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் படிக்க