• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்கிய விஜய் சேதுபதியின் படக்குழு

January 4, 2018 kalakkalcinema.com

விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் , ஆறுமுக குமார் இயக்கத்தில் , ‘7 C’s Entertainment Private Limited’ மற்றும் ‘Amme Narayana Entertainment’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ இப்படத்தின் தயரிப்பாளர்கள் இதுவரை யாரும் செய்திராத ஒரு புதிய, மாபெரும் விளம்பர யுக்தியை கையாளவுள்ளனர்.வரும் ஜனவரி 6 ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர கிரிக்கெட் விழாவில் பங்கேற்கவுள்ள அணிகளில் ஒன்றான ‘Ramnad Rhinos’ அணியை இவர்கள் வாங்கியுள்ளனர்.

இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்குவது இதுவே முதல் முறை. இந்த ‘Ramnad Rhinos’ அணியின் கேப்டன் விஜய் சேதுபதி ஆவார். இந்த நட்சத்திர கிரிக்கெட் விழாவில்தான் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா,மாபெரும் நட்சத்திர பட்டாளம் முன்னிலையில் நடைபெறவுள்ளது என்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

இந்த படத்தில் காயத்ரி மற்றும் நிஹாரிகா கோனிடேலா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.ஜஸ்டின் பிரபாகரன் இசையில், கோவிந்தராஜின் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

மேலும் படிக்க