• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவாக நடிக்கும் நித்யா மேனன் !

September 22, 2018 தண்டோரா குழு

இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் பிரியதர்ஷினி.இவர் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சக்தி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில்,ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி,தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.தமிழ்,தெலுங்கு,கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில்,முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சில நாட்களுக்கு முன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.இப்படத்திற்கு ” தி அயர்ன் லேடி”(The Iron Lady) என்று தலைப்பு வைத்துள்ளனர்.இந்நிலையில்,இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை நித்யா மேனன் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை,இயக்குனர் விஜய் மற்றும் பாரதிராஜா ஆகியோரும் தனித்தனியாக இயக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க