• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குத்துப்பாட்டுக்கு ரூ.65 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகை

March 25, 2017 tamilsamayam.com

பா. ரஞ்சித் இயக்கத்தில் வந்த மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. இப்படத்தைத் தொடர்ந்து கதகளி, கணிதன் ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார். தற்போது ராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் கடம்பன் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாகயிருக்கிறது.

மேலும் விஷ்ணு விஷால் ஜோடியாக `கதாநாயகன்’ படத்திலும், தெலுங்கில் `நேனே ராஜு நேனே மந்த்ரி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். பொய்யப்பட்டி சீனு இயக்கத்தில், ஸ்ரீனிவாஸ் நடிக்கும் பெயரிப்படாத படத்தில் குத்துப்பாட்டு ஒன்றுக்கு கேத்தரின் தெரசா நடனமாடுகிறார். இந்த பாடலுக்கு மட்டும் கேத்தரின் தெரசாவின் சம்பளம் ரூ.65 லட்சம் என்று கூறப்படுகிறது. இது தெலுங்கு பட உலகினரை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க