• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

படப்பிடிப்பில் நடிகை அமலாபால் காயம்!

August 14, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் தற்போது அறிமுக இயக்குநர் வினோத் இயக்கி வரும் ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் நடித்து வருகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை என்பதால் இப்படத்தில் அமலாபாலுக்கு பல சண்டைக்காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில்,அண்மையில் சண்டைக் காட்சியில் நடித்த போது அமலாபாலுக்கு அவரது வலது கையில் அடிபட்டுள்ளது.எனினும் அவர் தொடர்ந்து நடித்து வந்துள்ளார்.

இதற்கிடையில்,வலி அதிகமானதால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமலாபால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வலது கையின் தசைநாரில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.இதனால்,அமலாபாலை நன்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

‘அதோ அந்த பறவை போல’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் நடிகை அமலா பாலுக்கு கையில் காயம் ஏற்பட்டிருப்பதால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க