• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்!

August 23, 2018 தண்டோரா குழு

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் ‘கனா’.மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கிறார்.

அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில்,’கனா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று நடைபெற்றது.

அப்போது,சிவகார்த்திகேயன் தனது தனது சொந்த தயாரிப்பில் எடுக்கவிருக்கும் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதில் ஹீரோவாக விஜய் டிவி புகழ் ரியோ ராஜ் நடிக்கிறார்.இப்படத்தை ப்ளாக் ஷீப் குழு இயக்கவிருக்கிறது.விழா மேடையில்,சுட்டி அரவிந்த்,ஆர்ஜே விக்னேஷ்,அன்பு தாசன் உட்பட 20 பேர் கொண்ட பிளாக் ஷீப் குழுவை சிவகார்த்திகேயன் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது பேசிய சிவகார்த்திகேயன்,

“நான் சம்பாதிக்கும் காசு எனக்கு மட்டுமல்லாமல் என்னோட இருப்பவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்க வேண்டும்.அதனால் என்னால் முடிந்தவரை இதுபோன்று சினிமாவில் இருப்பவர்களை முன்னேற்ற முயற்சி செய்வேன்.அதற்காகத்தான் இம்மாதிரியான படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறேன்” எனக் கூறினார்.

மேலும் படிக்க