• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்புவிற்கு விரைவில் ரெட் கார்டு

November 24, 2017 தண்டோரா குழு

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு தானே இயக்கி நடிக்கவிருக்கும் படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகளில் பிஸியாகவுள்ளார்.இதனையடுத்து இயக்குநர் மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில், சிம்பு சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’விற்கு இசையமைத்திருந்தார். இதன் பாடல்கள் மற்றும் டிரையிலர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது.

இதற்கிடையில், கடந்த வாரம் ‘அண்ணாதுரை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபல தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க செயலாளருமான கே.ஈ.ஞானவேல்ராஜா “சிம்புவின் பெயரை குறிப்பிடாமல் அவர்மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ‘AAA’ படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் கொடுத்திருப்பதாக கூறினார்.

மேலும், இது தொடர்பான தக்க நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிம்புவிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெட் கார்டு கொடுத்துவிட்டதால், இந்த பிரச்சனை முடியும் வரை சிம்புவால் எந்த ஒரு படத்திலும் நடிக்க முடியாதாம். ஆகையால், சிம்பு ரசிகர்கள் ஷாக் மோடில் உள்ளனர்.மேலும், சிம்புவிற்கு ரெட் கார்டு கொடுத்துவிட்டால் மணிரத்னம் படத்தில் சிம்பு நடிப்பது கேள்விகுறியாகிவிடும்

மேலும் படிக்க