• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமலுடன் இணைந்து புரட்சி பெண் வேடத்தில் நடிக்கிறார் நயன்தாரா?

January 29, 2018 தண்டோரா குழு

சங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் படம் 2.0. பெரும் பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து சங்கர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவிக்கபட்டது. இப்படம் குறித்து அறிவிப்பை வெளியிடும் விதமாக தைவானில் சிறிய ரக பலூனை பறக்கவிட்டார் சங்கர்.

கமல் இதுவரை நடித்த  படங்களிலேயே  இந்தியன் 2 படம் தான் அதிக பட்ஜெட் படம் என்றும் படத்தையும் லைக்கா நிறுவனமே தயாரிக்கவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயனதாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் இப்படத்தில் ஒரு புரட்சி பெண் வேடத்தில் நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒருவேளை நயன்தாரா இப்படத்தில் நடிக்கும் பட்சத்தில் கமலுடன் அவர் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க