• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

96 படத்தின் 100வது நாள் விழாவில் நடந்த சுவாரசிய நிகழ்வு

February 5, 2019 தண்டோரா குழு

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பள்ளி பருவக் காதலை மையாகக் கொண்டு வெளியான படம் 96. இப்படம் அனைத்து தரப்பினர்களின் ஆதரவையும் பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் 100வது நாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில், விஜய்சேதுபதி, த்ரிஷா, இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட படக் குழுவினர்களும், சேரன், சமுத்திரக்கனி, திருமுருகன்காந்தி, பார்த்திபன் உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

அப்போது விழாவில் பேசிய நடிகர் பார்த்திபன்,

“96 படத்தின் கிளைமாக்ஸில் படம் பார்த்த அனைவரும் ராம், ஜானு ஆகிய 2 கதாபாத்திரங்களும் குறைந்தபட்சம் கட்டிப்படித்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி ஒரு காட்சி படத்தில் இல்லை. ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த கட்டிப்பிடி காட்சியை தற்போது நடித்து காட்டுமாறும் விஜய்சேதுபதி, த்ரிஷாவை கேட்டுக்கொண்டார். இதையடுத்து, மேடையில் விஜய்சேதுபதி த்ரிஷாவை கட்டிபிடித்தார்.

மேலும் மக்கள் திலகத்திற்கு பின் மக்களை உண்மையாகவே நேசிப்பவர் மக்கள் செல்வன் தான் என்றும், அவர் ரசிகர்களிடம் காட்டும் அன்பு உண்மையானது என்றும், அவர் ஒரு நடிகர் என்று கூறுவதைவிட நல்ல மனித நேயம் உள்ளவர் என்று பாராட்டுவதில் பெருமை அடைகிறேன் என்று பேசினார்.

மேலும் படிக்க