• Download mobile app
01 May 2026, FridayEdition - 3733
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த 2.0 படக்குழு !

October 19, 2018 தண்டோரா குழு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி,நடிப்பில் வெளியான படம் எந்திரன்.இப்படம் வசூல் ரீதியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.இதனைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2.0 படத்தை சங்கர் இயக்கி வருகிறார்.தற்போது படப்பிடிப்பு முடிந்து வீஎப்எக்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ரூ.400 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.முக்கிய வேடத்தில் அக்‌‌ஷய் குமார் நடித்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 29-ம் தேதி படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில்,பாடல் வரிகள் அடங்கிய வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் ராஜாளி,எந்திர லோகத்து சுந்தரியே உள்ளிட்ட இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க