• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2.0 வெற்றி பெற ரஜினி ரசிகர்கள் கோவிலில் நேர்த்திக்கடன் !

November 28, 2018

ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 திரைப்படம் வெற்றிகரமாக ஓட வேண்டி, மதுரை திருப்பரங்குன்றத்தில் ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.இந்திய சினிமா உலகில் அதிகபட்ச செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம் 2.0. கடந்த 2010 ல் வெளியான எந்திரனின் இரண்டாம் பாகமாகவே இது எடுக்கப்பட்டுள்ளது.இந்த படம் 550 கோடி செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் மட்டுமே இந்த வாரத்தில் வெளியாகவுள்ளது.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளதால், கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகிறது. 2.0. படம் ஹாலிவுட் படத்தை பார்ப்பது போல் ரசிகர்களுக்கு இருக்கும் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ள நிலையில் திரை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துவருகின்றனர்.

இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில்

ரஜினி ரசிகர்கள் சிலர் இந்த திரைப்படம் வெற்றிக்கரமாக ஓட வேண்டும் என்று “வெயிலுகாத்த அம்மன் கோவிலில்” சிறப்பு பூஜைகள் செய்தனர். மேலும், ரசிகர்கள் சிலர்மண்சோறு சாப்பிட்டும், அங்கபிரதட்சிணம் செய்தும் வழிபாடு நடத்தினர்.

ஆனால் இந்த படத்துக்கு புது சர்ச்சை எழுந்துள்ளது நாளை வெளியாக உள்ள இந்த படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என்று செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (Cellular Operators Association of India or COAI ) சார்பாக சென்சார் போர்டில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிக்கலால் திட்டமிட்டபடி 2.0 வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க