• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

1000 கோடி பட்ஜெட் படத்தில் கமல், அமிதாப்பச்சன், மோகன்லால்

May 24, 2017 தண்டோரா குழு

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி 2’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்தியாவில் பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் அதிகரித்து கொண்டே வருகிறது.

சமீபத்தில் இராமாயணம் திரைப்படத்தை ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கவுள்ளதாக வெளிவந்த செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் தற்போது ரூ.1000 கோடி பட்ஜெட்டில் மகாபாரதத்தை தழுவி ஒரு திரைப்படம் உருவாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரபல மலையாள எழுத்தாளர் வாசுதேவன் நாயர்மகாபாரத இதிகாசத்தின் முக்கிய கேரக்டரான ‘பீமன்’ கேரக்டரை தழுவி எழுதிய நாவல் ஒன்று தற்போது ரூ.1000 கோடி பட்ஜெட்டில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய மொழிகளிலும் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.

பீமன் கேரக்டரில் மோகன்லால் நடிக்கவுள்ளதாகவும் ‘கர்ணன்’ கேரக்டரில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனனை படக்குழுவினர் அணுகியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

‘எனது கேரக்டர் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு அதன் பின்னர் இந்த படத்தில் நடிப்பது குறித்து எனது முடிவை தெரிவிப்பேன்’ நாகார்ஜூனன் கூறியுள்ளார்.

இவர்களை தவிர இப்படத்தின் முக்கிய கேரக்டர்களில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன் உள்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும், இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க