• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹன்சிகாவால் குழப்பத்தில் சங்கமித்ரா படக்குழு

August 8, 2017 தண்டோரா குழு

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக சொல்லப்பட்டு வரும் வரலாற்றுப் படம் ‘சங்கமித்ரா’. பெண்ணை மையப்படுத்தி வரும் இந்தக் கதையில் சங்கமித்ராவாக நடிக்க முதலில் ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகியுருந்தார்.

அதற்காக பல பயிற்சிகளையும் மேற்கொண்டு கற்று வந்தார். ஆனால், திடீரென படத்தில் இருந்து விலகினார். இதனால் அவருக்குப் பதிலாக நடிகைகள் அனுஷ்கா மற்றும் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
எனவே, சுந்தர்.சி இயக்கிய படங்களில் அதிகமாக நடித்தவர் நடிகை ஹன்சிகா. ஒரு வழியாக ஹன்சிகாவை நாயகியாக தேர்ந்தெடுத்தனர்.

இருப்பினும் ஹன்சிகாவை வைத்து சுந்தர்.சி டெஸ்ட் ஷூட் எடுத்து பார்த்ததில், ஹன்சிகா அதற்கு செட்டாகவில்லை என தெரியவந்தது. எனவே, யாரை ஹீரோயினாகப் போட்டால் செட்டாகும் என்ற குழப்பத்தில் சுந்தர் சி. உட்பட படக்குழு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க