• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு களமிறங்கும் விஷால் !

September 18, 2018 தண்டோரா குழு

நடிகர் விஷால் கடந்த சில ஆண்டுகளாக, கதாநாயகனாக நடிப்பதைத் தாண்டி, பல்வேறு பொது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகிறார். நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலிலும் போட்டியிட முயற்சி மேற்கொண்டார். ஆனால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஷால் நடிப்பில் வெளிவந்த இரும்புத்திரை படத்தின் 100 வது வெற்றிக்கொண்டாடத்தின் போது அவரது ரசிகர் மன்றத்தை ‘விஷால் மக்கள் இயக்கம்’ என மாற்றினார். இப்படி பல வடிவங்களில் வெள்ளித்திரையில் கலக்கி வரும் விஷால் சன் டி.வி-யில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க தற்போது சின்னதிரைக்கு வரவுள்ளார்.

இன்னும் அறிவிக்கப்படாத அந்த நிகழ்ச்சிக்கான 11 விநாடிகள் ஓடக்கூடிய ப்ரோமோவை சன் டி.வி அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோவில், ‘விதைத்தவன் தூங்கலாம். விதைகள் தூங்காது. அன்பை விதைப்போமா…’ என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும் படிக்க