• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெற்றி இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கும் ஜீவி பிரகாஷ்

February 20, 2018 தண்டோரா குழு

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘நாச்சியார்’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்தில் ஜீவி.பிரகாஷின் நடிப்புக்கும் பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், நயன்தாராவின் அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகனாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

முழுக்க வட சென்னையை களமாகக் கொண்ட இப்படத்தின் முதல்கட்ட வேலையில் இறங்கியிருந்தார் கோபி நயினார். இதில் குத்துச்சண்டை முக்கிய அம்சமாக இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, ‘செம’, ‘100 % காதல்’, ‘அடங்காதே’, ‘ஐங்கரன்’, ‘ரெட்ட கொம்பு’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது இப்படத்தின் குத்துச்சண்டை காட்சிகளுக்காக  பிரத்யேகமாக பயிற்சி பெற உள்ளார்.

மேலும் படிக்க