• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘விஸ்வாசம்’ தீபாவளிக்கு வருவது வாய்ப்பில்லை: படக்குழு!

April 25, 2018 tamilsamayam.com

அஜீத் நடிக்கவுள்ள ‘விஸ்வாசம்’ இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகாது என படக்குழு திட்டவட்டமாக கூறியுள்ளது.

‘விவேகம்’ படத்தை தொட்ர்ந்து அஜீத் & சிவா கூட்டணி நான்காவது முறையாக மீண்டும் ‘விஸ்வாசம்’ படம் மூலம் இணைந்துள்ளது.இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஸ்டிரைக் நடப்பதற்கு முன்பு படக்குழு அறிவித்தது. இதனால் ரசிகர்கள் அதிக சந்தோஷத்தில் இருந்தனர்.தற்போது படம் தீபாவளிக்கு வெளியாகாது என்று படக்குழு கூறியவுடன் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர்.

ஒரு மாதம் நடைபெற்று வந்த ஸ்டிரைக்கால் எந்தப் படப்பிடிப்பு நடைபெறவில்லை.படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாத நிலையில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

‘விஸ்வாசம்’, ‘தளபதி 62’, ‘என்ஜிகே’ உள்ளிட்ட படங்கள் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,இந்த போட்டியில் இருந்து ‘விஸ்வாசம்’ விலகுவதாக தெரிகிறது.

மேலும் படிக்க