• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஷால், கார்த்தி, நாசர் மீது வழக்கு பதிவு செய்யலாம் – சென்னை உயர்நீதிமன்றம்

September 23, 2017 தண்டோரா குழு

நடிகர்கள் விஷால்,கார்த்தி,நாசர் ஆகியோர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த பணம் பெற்று தனியார் டிவிக்கு அனுமதி வழங்கி, விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் கையாடல் செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சங்க உறுப்பினர் வராகி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இம்மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,இதனை விசாரித்த நீதிமன்றம் புகார் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், முகாந்திரம் இருந்தால் நடிகர்கள் விஷால்,கார்த்தி,நாசர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

மேலும் படிக்க