• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜயா புரடெக்ஷன்ஸ் தயாரிக்கும் 102வது படத்தில் நடிகர் விக்ரம்!

September 2, 2017 tamilsamyam.com

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜயா புரடெக்ஷன்ஸ் நிறுவன தயாரிக்கும் 102வது படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பழம்பெரும் பட நிறுவனமான விஜயா புரடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் 100வது படம்தான் அஜீத் நடித்த ‘வீரம்’. இந்தப்படம் தயாரிப்பு நிர்வாகம் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கொடுக்கவில்லையாம். அடுத்ததாக விஜய்யை வைத்து ‘பைரவா’ படத்தை தயாரித்தது. இதுவும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லையாம்.

இந்நிலையில், இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ஒரு படத்தை, விஜயா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களுடைய 100வது படத்தில் அஜீத்தையும், 101வது படத்தில் விஜய்யை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்களை தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் இப்போது தனது 102வது தயாரிப்பாக விக்ரம் படத்தை உருவாக்கவிருப்பதாக உறுதியாக சொல்கின்றனர். இந்தப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.

இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணியில் ஈடுபட்டிருக்கிறாராம் கே.வி.ஆனந்த். ஹரி இயக்கத்தில் தொடங்கப்பட உள்ள ‘சாமி 2’ படப்பிடிப்பை முடித்துவிட்டு,கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் தொடங்கப்பட உள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

மேலும் படிக்க