• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராஜ பீமா படப்பிடிப்பில் யானை மேல் இருந்து கீழே விழுந்த ஆரவ்

February 9, 2019 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று பிரபலமானவர் ஆரவ். இவர், தற்போது ‘ராஜா பீமா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் காடு சார்ந்த படம் என்பதால் ஆரவ் உடன் ஒரு யானையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. படத்தின் முக்கியமான காட்சிகளை தாய்லாந்தில் படம் பிடிக்கும் குழுவினர், ஒரு சில காட்சிகளை பொள்ளாச்சியிலும் படம் பிடித்தனர்.

இதற்கிடையில், கடந்த 7 நாட்களாக கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில், ஓங்கி வளர்ந்த ராட்சச மரங்கள் இடையேயும் படமாக்கி வருகின்றனர். அதன்படி யானை மீது ஆரவ் அமர்ந்திருப்பது போல் ஒரு காட்சி பாடமாக்கப்பட்டது. அப்போது ஆரவ் யானையிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதையடுத்து, படப்பிடிப்பு குழுவினர் மருத்துவ உதவியை உடனே நாடினர். முதலுதவி சிகிச்சைக்கு பின் ஆரவ் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க