• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியின் 2.0 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

July 11, 2018 தண்டோரா குழு

ரஜினியின் 2.0 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி,நடிப்பில் வெளியான படம் எந்திரன்.இப்படம் வசூல் ரீதியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.இதனைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2.0 படத்தை சங்கர் இயக்கி வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.கடந்த ஜனவரி மாதம் படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.ஆனால் வீஎப்எக்ஸ் பணிகளால் படம் வெளியாவதில் தாமதமானது.தற்போது படப்பிடிப்பு முடிந்து வீஎப்எக்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில்,நவம்பர் 29ல் 2.0 படம் வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க