• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினியின் பேட்ட படத்தில் இணைந்த சசிகுமார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

October 5, 2018 தண்டோரா குழு

காலா படத்தின் வெற்றிக்கு பின் ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கும் படக்குழுவினர் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பேட்ட படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது லக்னோ மற்றும் வாரணாசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் ரஜினி, விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சிகள் லக்னோவிலும், வாரணாசியிலும் படமாக்கப்பட்ட நிலையில் ரஜினி, திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர்.

இதற்கிடையில், படத்தில், நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பேட்ட படத்தில் சசிகுமார் இணைத்துள்ளதாக சன் பிக்ஸர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சசிக்குமார் தற்போது ’கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து சசிக்குமார் வாரணாசியில் நடைபெற்று வரும் பேட்ட படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராக நடிகர் சசிகுமார் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் அவர் திரிஷாவுக்கு அண்ணனாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.ஏற்கனவே சசிகுமார் நடிகர் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு அண்ணனாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க