• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியின் பேட்ட படத்தில் இணையும் மற்றொரு ஹீரோ !

October 4, 2018 தண்டோரா குழு

காலா படத்தின் வெற்றிக்கு பின் ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கும் படக்குழுவினர் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேட்ட படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது லக்னோ மற்றும் வாரணாசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் ரஜினி, விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சிகள் லக்னோவிலும், வாரணாசியிலும் படமாக்கப்பட்ட நிலையில் ரஜினி, திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் படத்தில், நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சசிக்குமார் தற்போது ’கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து சசிக்குமார் வாரணாசியில் நடைபெற்று வரும் பேட்ட படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராக நடிகர் சசிகுமார் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் அவர் திரிஷாவுக்கு அண்ணனாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் வெளியாகும் என படக்குழு வட்டாரத்தில் கூறப்படுகிறது. சசிகுமார் ஏற்கனவே நடிகர் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு அண்ணனாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க