• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் – ராதிகா ஆப்தே

April 22, 2017 தண்டோரா குழு

ரஜினியிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகே தனியார் அழகுக்கலை கூடம் திறப்பு விழாவில் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நடிகர் ரஜினிகாந்த் மனிதநேயம் மிக்கவர் மற்றும் பண்பானவர் என்றும் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். திரையில் அவரை பார்த்து ரசித்த எனக்கு அவருடன் நடித்தது சிறப்பானது என்றார்.

மொழி காரணமாக தமிழை காட்டிலும் இந்தி திரைப்படங்களில் நடிப்பது தனக்கு எளிமையாக இருப்பதாக குறிப்பிட்ட ராதிகா ஆப்தே கபாலிக்கு பிறகு தமிழ் படங்கள் எதுவும் ஒப்பந்தமாகவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் , இந்திய சினிமா துறையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைக்கதைகள் குறைவு என்றும், அது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் ராதிகா ஆப்தே வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க