• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்றாம் முறையாக சிம்பு படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் !

January 18, 2021 தண்டோரா குழு

சிலம்பரசன், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும், பத்து தல படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய ஓபிலி என்.கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். ப்ரியா பவானிசங்கர், டீஜே, மனுஷ்யப்புத்திரன், கலையரசன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டரில் சிம்பு நாற்காலி ஒன்றில் அமர்ந்தபடி முகத்தை திருப்பி அமர்ந்திருக்கிறார். மற்றொரு போஸ்டரில் மற்ற நடிகர்கள் இடம் பெற சிம்பு முகம் தெரியாத அளவுக்கு உள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயே, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பின் மூன்றாவது முறையாக சிம்புவின் படத்திற்கு இசையமைக்கிறார் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க