• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் முதல்வர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள அர்ஜுன்

May 12, 2017 tamilsamayam.com

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்க உள்ளார்.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மகனுமாகிய குமாரசாமி, ஏற்கனவே திரைப்பட தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் திரையுலகில் பங்கு பெற்றவர். தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வரும் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு “பூமி புத்ரா” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் குமாரசாமி கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.நாராயணன் என்பவர் படத்தை இயக்க உள்ளார்.

பூமி புத்ரா என்ற பெயரை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் பதிவு செய்து வைத்திருந்தது. ஆனால் அந்த பெயரை சென்னாம்பிகா தயாரிப்பு நிறுவனம் தற்போது வாங்கியுள்ளது. இந்த சென்னாம்பிகா தயாரிப்பு நிறுவனம், முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தனது வாழ்க்கை வரலாற்றை தானே தயாரிக்க உள்ளார் குமாரசாமி.

தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கும்,கர்நாடக மக்களிடையே செல்வாக்கை அதிகரிக்கவும் தனது வாழ்க்கை வரலாற்று திரைப்படம் உதவியாக இருக்கும் என குமாரசாமி முடிவு செய்துள்ளதால், இந்த புதிய முயற்சியில் அவர் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க