• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதன்முறையாக சூர்யா படத்திற்கு விமானத்தில் புரமோஷன்

February 13, 2020 தண்டோரா குழு

நடிகர் சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்துள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை தழுவியே இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.

இதற்கிடையில்,இந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற விழாவில், சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு போஸ்டருடன் கூடிய விமானத்தை அறிமுகம் செய்தனர்.

சூர்யா படத்திற்கு விமானத்தில் புரமோஷன் செய்யப்படுவது இதுவே முதன்முறை. இதற்குமுன் ரஜினியின் காலா, தர்பார் படங்களுக்கு மட்டுமே விமானத்தில் புரமோஷன் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க