• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் ஹரி-சூர்யா கூட்டணியில் உருவாகிறதா சிங்கம் 4 ?

April 5, 2018 தண்டோரா குழு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கலன்று  வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா தற்போது, செல்வராகவன் இயக்கும் ‘NGK’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,நடிகர் சூர்யா இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஹரி இயக்கத்தில் ஏற்கெனவே, ‘வேல், ஆறு, சிங்கம் 1, 2, 3’ ஆகிய படங்களில் சூர்யா நடித்துள்ளார். இதனால் இப்படம் சிங்கம் 4 தானா என்றும் பலரும் எதிர்பார்த்தனர்.ஆனால், இன்னும் பெயரிடப்படாத இப்படம் ‘சிங்கம்’ பாகங்களின் தொடர்ச்சி இல்லையாம். இது முற்றிலும் வேறு ஒரு கதையாம். இதை ஹரியே பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும் படிக்க