• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் தமிழ்பட இயக்குநர் குறித்து ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு

July 16, 2018 தண்டோரா குழு

தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்,நடிகர்கள் ஸ்ரீகாந்த்,லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார்.இதனால் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு அச்சுறுத்தல் வருவதாகவும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். இதற்கிடையில்,ஸ்ரீ ரெட்டி தற்போது நடிகரும்,இயக்குனருமான சுந்தர்.சி மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில்,

ஹைதராபாத்தில் அரண்மனை படப்பிடிப்பு நடந்தது.அப்போது படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் யார் மூலமாகவோ என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார்.நான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற போது அவர் என்னை சுந்தர்.சி யிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

ஃபேஸ்புக் நண்பர் செந்தில்குமாரையும் (கேமராமேன்) சந்தித்தேன்.அடுத்த படத்தில் நீங்களும் ஒரு ஹீரோயின் என்று எனக்கு அவர் வாக்குறுதி அளித்தார்.மறுநாள் போன் செய்து நோவோடெல் ஓட்டலுக்கு வரச் சொன்னார்.படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர்(கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட்(பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர்.அதன் பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்… கணேஷ் ஒரு பிராடு,அவர் எனக்கு உதவி செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க