• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் தமிழில் மாஸ் காட்ட வருகிறார் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்!!

May 7, 2018

பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் கம்பேக் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா, தமிழில் என் ராசாவின் மனசிலே, துள்ளுவதோ இளமை உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி உள்ளார். இவர் கடைசியாக, 2006 ஆம் ஆண்டு ‘இது காதல் வரும் பருவம்’ என்ற படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து, படங்கள் எதுவும் இயக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், அவர் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின் ‘பாண்டி முனி’ என்ற படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ‘ஜாக்கி ஷெராப்’ அகோரி வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஏற்கனவே, தமிழில் ‘ஆரண்ய காண்டம்’, ‘மாயவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இப்படத்திற்கு மது அம்பத் ஒளிப்பதிவு செய்வார் எனவும், ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க